எல்லாம் சொத்துக்கா.? இரும்பு கம்பியால் அடித்து 70 வயது முதியவர் கொலை... காவல்துறை தீவிர விசாரணை !
எல்லாம் சொத்துக்கா.? இரும்பு கம்பியால் அடித்து 70 வயது முதியவர் கொலை... காவல்துறை தீவிர விசாரணை !
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே 70 வயது முதியவர் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள புதுப்பட்டி பேரூராட்சியைச் சார்ந்தவர் சுப்பிரமணியம் வயது 70. இவர் அந்தப் பகுதியில் ரேடியோ செட் கடை நடத்தி வந்தார். இவர் மின்சார ஊழியராக இருந்து ஓய்வு பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ரேடியோ செட் வேலை இல்லாத நேரங்களில் வீடுகளுக்கு சென்று தண்ணீர் கேன் போடும் வேலையும் செய்து வந்தார்.
இவரது இரு மகன்களும் அதே பகுதியில் தான் தனியாக வசித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நேற்று முன் தினம் இரவு இவரது ரேடியோ செட் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் இவரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளனர். அவர் தனியாக இருந்ததால் நேற்று காலை தான் கொலை செய்யப்பட்ட விபரம் வெளியே தெரிந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து அவரது சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இந்த கொலை தொடர்பாக தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டையும் நடத்தப்பட்டது. அதனால் குற்றவாளிகள் யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் ராசிபுரம் கண்காணிப்பாளர் தலைமையில் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தினர். சொத்து தகராறு காரணமாக சுப்பிரமணியம் கொலை செய்யப்பட்டாரா.? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா.? என காவல்துறை தீவிரமாக விசாரணை செய்து கொலையாளிகளை தேடி வருகிறது.