மின்னல் தாக்கியதில் 7500 கோழிகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழப்பு; கதறி அழுத உரிமையாளர்; நொடியில் நடந்த சோகம்.!
மின்னல் தாக்கியதில் 7500 கோழிகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழப்பு; கதறி அழுத உரிமையாளர்; நொடியில் நடந்த சோகம்.!
கோழிப்பண்ணை மீது மின்னல் தாக்கியதில், பண்ணையில் இருந்த கோழிகள் ஒட்டுமொத்தமாக பரிதாபமாக உயிரிழந்தன.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரூர், மலைத்தாங்கி கிராமத்தை சேர்ந்தவர் திருப்பதி. இவருக்கு சொந்தமான கோழிப்பண்ணை கிராமத்தில் உள்ளது. நேற்று நள்ளிரவில் அப்பகுதியில் மழைக்கான சூழல் நிலவி வந்த நிலையில், திடீரென மின்னல் கோழிப்பண்ணை முழுவதையும் தாக்கியுள்ளது.
இந்த சம்பவத்தில் கோழிப்பண்ணை முழுவதும் தீப்பற்றி எரிய தொடங்கி, அதில் இருந்த 7500 க்கும் அதிகமான கோழிகள் தீயில் எரிந்து கருகிக்கொண்டு இருந்தன. அங்கு இரவு நேர பாதுகாப்பு பணியில் இருந்த திருப்பதியின் அண்ணன் சிதம்பரம், இதுகுறித்து திருப்பதி மற்றும் அவரின் மனைவிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்தவர்கள் கோழிகளை கண்டு கதறி அழுதனர். தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து, அவர்கள் வருவதற்குள் 7500 கோழிகளும் தீயில் சிக்கி உயிரிழந்த. 250 க்கும் அதிகமான தீவன மூட்டையும் நாசமாகின.