×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

8 மாத கர்ப்பிணி பெண்; காதலன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை...!

8 மாத கர்ப்பிணி பெண்; காதலன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை...!

Advertisement

மூன்று நாட்களில் திருமணம் நடக்க உள்ள நிலையில் எட்டு மாத கர்ப்பிணியின மணப்பெண், மணமகன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் மேப்பலம் பகுதியில் வசித்து வருபவர் முருகையன். இவருடைய மகன் நரேஷ்குமார் (24). பி.காம் படித்துள்ள நரேஷ் குமார் திருவாரூரில் உள்ள ஒரு ஓட்டலில் செய்து வருகிறார். 

நரேஷ் குமாரும் திருவாரூர் மாவட்டம் கமலாபுரம் நத்தம் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகள் சுஷ்மிதாவும் (21). மூன்று வருடங்களாக காதலித்து வந்தனர். இருவரும் நெருங்கி பழகியதால் சுஷ்மிதா கர்ப்பமானார். ஏழு மாத கர்ப்பிணியாக இருந்த சுஷ்மிதா ஒரு மாதத்துக்கு முன்பு தனது வீட்டை விட்டு வெளியேறி நரேஷ்குமார் வீட்டுக்கு வந்தார். 

வருகிற 12-ஆம் தேதி இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருந்த நிலையில், சுஷ்மிதா கடந்த 1½ மாதமாக நரேஷ் குமாரின் வீட்டில் தங்கி இருந்தாா். திருமணத்துக்கு இன்னும் மூன்று நாட்களே இருந்த நிலையில் நேற்று நரேஷ்குமாரின் பெற்றோர் திருமணத்துக்கு தேவையான துணிகள் மற்றும் தாலி போன்றவை வாங்க திருவாரூருக்கு சென்றனர். 

சுஷ்மிதா வீட்டில் தனியாக இருந்தார். சிறிது நேரம் கழித்து நரேஷ்குமார் வீட்டிற்கு வந்தார்.  அப்போது வீட்டின் பின்புறம் இருந்த கூரைக்கொட்டகையில் சுஷ்மிதா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது காதலி சுஷ்மிதா தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.  

உடனே இதுகுறித்து கொரடாச்சேரி காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து சுஷ்மிதா உடலை மீட்டு  திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மூன்று நாட்களில் திருமணம் நடக்க இருந்த நிலையில் எட்டு மாத கர்ப்பிணி பெண் மணமகன் வீட்டில் தூக்கில் தொங்கிய சம்பவம் கொரடாச்சேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil nadu #Tiruvarur #8 months pregnant woman #Boyfriend committed suicide by hanging
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story