தனிமையில் காதலனுடன் கொஞ்சல்! நேரில் பார்த்த 8வயது சிறுவனுக்கு துடிதுடிக்க நேர்ந்த கொடூரம்! பகீர் சம்பவம்!
8 year, child killed by lovers in thirupur
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே பள்ளக்கவுண்டம்பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் தங்கராஜ். இவரது மனைவி சுமதி. இவர்கள் இருவரும் திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு 9 வயதில் விக்னேஷ் என்ற மகனும், 8 வயதில் பவனேஷ் மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்கராஜ் மற்றும் சுமதி இருவரும் வேலைக்கு சென்ற நிலையில், அவர்களது மகன்கள் இருவரும் அப்பகுதியை சேர்ந்த சிறுவர்களுடன் அருகேயுள்ள மைதானத்தில் விளையாடி வந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மதியம் அனைவரும் அவரவர் வீட்டிற்கு சென்ற நிலையில் சிறுவன் பவனேஷ் மட்டும் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் வேலை முடிந்து வீடு திரும்பிய தங்கராஜ் மகனைக் காணவில்லை என தெரிந்து பதறியடித்துக்கொண்டு, அப்பகுதி முழுவதும் தேடியுள்ளார். ஆனால் சிறுவன் எங்கும் கிடைக்காத நிலையில் அவர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.
அப்பொழுது சிறுவன் கழுத்து மற்றும் வயிறு பகுதியில் கத்தியால் கொடூரமாக குத்தப்பட்டு உயிரிழந்தநிலையில் புதர் ஒன்றில் இருந்து கண்டெடுக்கபட்டான். இதனை கண்ட பெற்றோர்கள் கதறி துடித்தனர். பின்னர் சிறுவனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது குறித்து அப்பகுதியில் விசாரணை மேற்கொண்ட நிலையில், சிறுவனை அவரது பக்கத்து வீட்டு சிறுமி அழைத்துச் சென்றது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரிடம் விசாரித்ததில், சம்பவத்தன்று அப்பகுதிக்கு வந்த கல்லூரி மாணவன் ஒருவன் காதலியான அந்த சிறுமியை தனியாக அழைத்து சென்று, நெருக்கமாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த பவனேஷ் அவர்கள் இருவரையும் கண்ட நிலையில் அவன் வீட்டில் சொல்லிவிடுவானோ என்ற பயத்தில் சிறுவனை தனியாக காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று காதல்ஜோடி கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது. இத்தகைய கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.