ரயில்வே தேர்வில் தேர்வானவர்களில் 90% பேர் வெளி மாநிலத்தவர்கள்! 10 தமிழர்கள் மட்டுமே தேர்வு!
90% of Railway Examinations are from outside States
மதுரை கோட்டத்தில் நடந்த ரயில்வே தேர்வில் தேர்வானவர்களில் 90% பேர் வெளி மாநிலத்தவர்கள் மட்டுமே தேர்வாகியுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை கோட்டத்தில் நடந்த ரயில்வே தேர்வில் தேர்வானவர்களில் 90% பேர் வெளி மாநிலத்தவர்கள் மட்டுமே தேர்வாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாகவே ரயில்வேயில் தமிழர்களுக்கு அதிகம் கிடைப்பதில்லை என பரவலாக பேசப்பட்டு வந்தது.
இதனால் தற்போது வெளியான தகவல் தமிழக மக்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இதுகுறித்து ரயில்வே கூறுகையில், "தேர்வில் அதிக அளவில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்காததே காரணம் என விளக்கம் அளித்துள்ளது.
மதுரை கோட்டத்தில் நடந்த ரயில்வே தேர்வில் 572 பணியிடங்கள் நிரப்பப்பட்டதில் தமிழகத்தைச் சேர்ந்த 10-க்கும் குறைவானவர்கள் இடம் பெற்றுள்ளனர். ஆனால் மற்ற மாநிலங்களில் நடைபெறும் தேர்வுகளில் தமிழர்கள் அதிக அளவில் வெற்றி பெற முடியாத நிலையில் தமிழகத்தில் நடக்கும் தேர்விலும் வெளிமாநிலத்தவர்களே தேர்வு பெற்றால் தமிழர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகிவிடும் என்று பேசப்பட்டு வருகிறது.