பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து டெலிகிராமில் விற்பனை... ஈரோட்டை சேர்ந்த 22 வயது இளைஞர் கைது.!
பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து டெலிகிராமில் விற்பனை... ஈரோட்டை சேர்ந்த 22 வயது இளைஞர் கைது.!
பொதுவெளியில் செல்லும் பெண்களை புகைப்படம் எடுத்தும் சமூக வலைதளங்களில் பதிவேற்றும் பெண்களின் புகைப்படங்களையும் ஆபாசமாக சித்தரித்து அதனை டெலிகிராம் மூலம் விற்பனை செய்து வந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து டெலிகிராம் செயலி மூலம் விற்பனை செய்து வந்தது அம்பலம் ஆகியிருக்கிறது. இது தொடர்பாக சென்னை ஆதம்பாக்கத்தைச் சார்ந்த ஒருவர் கடந்த ஜூலை மாதம் சைபர் கிரைமில் புகார் அளித்திருந்தார் .