கல்லூரி காதல் பரிதாபம்.. காதலால் கர்ப்பம்..! 8 மாதம் நடித்து, சூழ்நிலை தற்கொலைக்கு முயற்சித்து ஊசலாடும் உயிர்..!
கல்லூரி காதல் பரிதாபம்.. காதலால் கர்ப்பம்..! 8 மாதம் நடித்து, சூழ்நிலை தற்கொலைக்கு முயற்சித்து ஊசலாடும் உயிர்..!
கர்ப்பமான மாணவி வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், அவருக்கு ஆண் குழந்தை இறந்து பிறந்தது.
சென்னையில் உள்ள கோடம்பாக்கத்தில், சினிமா லைட் மேனாக பணியாற்றும் நபரின் மகள், தனது தந்தையிடம் வயிறு வலிக்கிறது என்று கூறியுள்ளார். தந்தையும் மகளுக்கு மாதவிடாய் சுழற்சியால் வயிறு வலிக்கலாம் என நினைத்து, வெந்தயம் கலந்த நீரை மகளிடம் குடிக்க கொடுத்துள்ளார். அதனை குடித்த மாணவியோ, மாடிக்கு சென்ற நிலையில் திடீரென கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சித்து இருக்கிறார்.
மாணவி ஏற்கனவே 8 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், மாடியில் இருந்து குதித்ததால் வயிற்றில் இருந்த ஆண் குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது. பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் பெற்றோர், பலத்த காயத்துடன் மகள் இரத்த வெள்ளத்தில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், மகள் அருகே சிசுவும் இருப்பதை கண்டு திகைத்து போயுள்ளனர்.
உடனடியாக, இளம்பெண்ணை மீட்ட பெற்றோர் சிகிச்சைக்காக அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கவே, மாணவிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் அளிக்கப்பட்ட தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த வடபழனி காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், இளம்பெண்ணுடன் பயின்று வந்த செங்கல்பட்டு பகுதியை சார்ந்த பாக்யராஜ் என்ற இளைஞரை காதலித்து வந்ததும், இருவரும் நெருங்கி பழகியதால் மாணவி கர்ப்பமானதும் உறுதியானது. திருமணம் செய்யாமல் காதலித்து கர்ப்பமான விஷயம் பெற்றோருக்கு தெரியக்கூடாது என எண்ணிய மாணவி, வீட்டில் எதனையும் தெரிவிக்காமல் இருந்துள்ளார்.
மகளின் உடலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை கவனிக்க தவறிய பெற்றோரும், மகள் படிக்கிறார் என்று எண்ணியிருந்த நிலையில் சோகம் நடந்துள்ளது. சம்பவத்தன்று, தன்னை மலைபோல நம்பியிருந்த பெற்றோரை ஏமாற்றி இருக்கிறோமே, இன்னும் சில வாரங்களில் குழந்தை பிறந்துவிடும் என்று எண்ணி வருந்திய மாணவி, மாடியில் நடைப்பயிற்சிக்கு செல்வதாக கூறி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
இதுகுறித்து வடபழனி காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.