கல்லூரி மாணவி காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்: நீண்ட போராட்டத்திற்கு பிறகு காதலன் வீட்டுக்கு அனுப்பி வைத்த போலீசார்..!
கல்லூரி மாணவி காவல் நிலையத்தில் காதலனுடன் தஞ்சம்: நீண்ட போராட்டத்திற்கு பிறகு காதலன் வீட்டுக்கு அனுப்பி வைத்த போலீசார்..!
திண்டுக்கல் அருகேயுள்ள வடமதுரை காவல் நிலையத்தில் கல்லூரி மாணவி ஒருவர் பாதுகாப்பு கேட்டு காதலனுடன் தஞ்சம் அடைந்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகேயுள்ள தம்பிநாயக்கன் பாறைப்பட்டியை சேர்ந்தவர் நதியா (20). இவர் திண்டுக்கல் அருகே உள்ள தனியார் கல்லூரியில் வணிகவியல் 3ஆம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
இவரது பக்கத்து வீட்டிற்கு கரூர் மாவட்டம், முத்தகாம்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் (22) என்ற இளைஞர் அடிக்கடி வந்து சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது.
இதனையடுத்து கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு ந்தியாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது. இதன் காரணமாக காதலர்கள் இருவரும் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர்.
இந்த நிலையில் நதியாவை காணவில்லை என அவரது பெற்றோர் வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நதியாவை தேடிவந்தனர். தங்களை தேடுவதை அறிந்த காதலர்கள் இருவரும் இன்று வடமதுரை காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
இதனையடுத்து காவல்துறையினர் இருதரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் ரமேஷின் பெற்றோர் காதலை ஏற்றுக் கொண்டதால், மணமக்களை அவர்களுடன் அனுப்பிவைத்தனர்.