ஆணுறுப்பை அறுத்துக் கொண்ட கள்ளக்காதலன்... முறையற்ற தொடர்பால் வந்த விபரீதம்...!!
ஆணுறுப்பை அறுத்துக் கொண்ட கள்ளக்காதலன்... முறையற்ற தொடர்பால் வந்த விபரீதம்...!!
தேனி மாவட்டம் கம்பம் பகுதிக்கு அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் சரவணன் (47). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நாகராணி. இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், சரவணனுக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த நாகராணி, தன் கணவர் சரவணனை கண்டித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் மதுபோதையில் வீட்டுக்கு வந்த சரவணன், தான் தொடர்பில் உள்ள பெண்ணுக்கும் தனக்கும் கொடுக்கல் வாங்கல் உள்ளது எனவே, அந்த பெண்ணுக்கு நான் பணம் தர வேண்டும் என்று சொல்லி நாகராணியிடம் பணம் கேட்டு சண்டை போட்டுள்ளார். நாகராணி பணம் மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சரவணன், கழிப்பறைக்கு சென்று, அவரது அந்தரங்க உறுப்பை பிளேடால் அறுத்துக்கொண்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார். சரவணனின் அலறல் சத்தத்தை கேட்டு ஓடிவந்த நாகராணியும் அவரது உறவினர்களும், சரவணனை மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இது தொடர்பாக நாகராணி அளித்த புகாரின் அடிப்படையில், ராயப்பன்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண்ணுக்காக தனது அந்தரங்க உறுப்பை ஒருவர் அறுத்துக் கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.