பெரும் சோகம்.. தீபாவளி கொண்டாட ஆசையாக சொந்த ஊருக்கு செல்லும்போது விபத்தில் சிக்கி இளைஞர் பலி.!
பெரும் சோகம்.. தீபாவளி கொண்டாட ஆசையாக சொந்த ஊருக்கு செல்லும்போது விபத்தில் சிக்கி இளைஞர் பலி.!
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் அரக்கோணம் அருகிலுள்ள இலுப்பை தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த டில்லிபாபு பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று காலை தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக டில்லிபாபு தனது இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளார். இவர் அரக்கோணம் செல்வதற்காக சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் பயணித்துள்ளார். அப்போது டில்லி பாபு செட்டிபெடு அருகில் சென்ற போது பின்னால் வந்த லாரி மோதியதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து தகவலறிந்து அங்கு விரைந்து வந்த காவல் துறையினர் டில்லி பாபுவின் உடலை மீட்டு ஶ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் டில்லிபாபு வீட்டிற்கு விபத்து பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து காவல் துறையினர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரியை அங்குள்ள சிசிடிவி பதிவுகளை வைத்து காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் தீபாவளி கொண்டாட ஆசையோடு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த இளைஞர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.