தேங்காய் நார் ஏற்றி வந்த லாரி.. கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்து.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுனர்..!
தேங்காய் நார் ஏற்றி வந்த லாரி.. கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்து.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுனர்..!
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே இயங்கி வரும் தேங்காய் நார் தயாரிக்கும் மில்லில் இருந்து லாரி ஒன்று தேங்காய் நார் பஞ்சு மூட்டைகளை அதிக அளவில் ஏற்றிக்கொண்டு பொள்ளாச்சி நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில் இந்த லாரியானது கரூர் மாவட்டம் புகலூர் அருகே காவிரி ஆற்று பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த போலீஸ் செக் போஸ்ட்டில் இருபுறமும் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் அதிர்ஷ்டவசமாக லாரி ஓட்டுனரும் விபத்து நடந்த பகுதியில் இருந்த மற்றொரு லாரி ஓட்டுநரும் உயிர் தப்பினர்.
இந்த விபத்தில் சாலையின் நடுவே லாரி கவிழ்ந்ததால் சேலத்தில் இருந்து கரூர் செல்லும் பாதையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.