4 பிள்ளைக்கு அப்பன் செய்ற வேலையா இது?.. சிறுமியிடம் அத்துமீறியதால் நடந்த கொடூரம்.. பதறிய குடும்பம்.!!
4 பிள்ளைக்கு அப்பன் செய்ற வேலையா இது?.. சிறுமியிடம் அத்துமீறியதால் நடந்த கொடூரம்.. பதறிய குடும்பம்.!!
17 வயது சிறுமியை மிரட்டி அத்துமீறிய காமுகன் காவல் துறையினரால் போக்ஸோவில் கைது செய்யப்பட்டுள்ளான்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி, கீழபாண்டவர்மங்கலம் பகுதியை சார்ந்தவர் மகேந்திரன் (வயது 42). இவர் தனியார் தீப்பட்டி தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி நான்கு குழந்தைகளும் இருக்கின்றனர்.
இவரின் வீட்டருகே 17 வயது சிறுமி வசித்து வருகிறார். அந்த சிறுமிக்கு மகேந்திரன் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிய வருகிறது. இதனை வெளியே சொன்னால் சிறுமி மற்றும் அவரது குடும்பத்தை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டவே, பயந்து போன சிறுமி எதுவும் கூறாமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில், சிறுமிக்கு வயிற்று வலி ஏற்படவே, அவரின் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனை முடிவில், சிறுமி ஆறு மாத கர்ப்பமாக இருப்பது உறுதியானது. விசாரிக்கையில், சிறுமியை மகேந்திரன் இரண்டு வருடமாக பாலியல் தொல்லை கொடுத்து பலாத்காரம் செய்தது அம்பலமானது.
உண்மையை அறிந்து பதறிப்போன பெற்றோர், துயரம் தொடர்பாக கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர், புகாரை ஏற்ற காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, காமுகன் மகேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.