காதலியோடு திருமணம் செய்துவையுங்கள்.. மறுத்தால்., தமிழக முதல்வருக்கு இளைஞர் பரபரப்பு கடிதம்.!
காதலியோடு திருமணம் செய்துவையுங்கள்.. மறுத்தால்., தமிழக முதல்வருக்கு இளைஞர் பரபரப்பு கடிதம்.!
வேலைக்கு வந்த இடத்தில் இளம்பெண்ணை காதலித்த 40 வயது நபர், காதலியுடன் திருமணம் செய்துவைக்காத பட்சத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிப்பேன் என அரசு மற்றும் அதிகாரிகளுக்கு மனு வடிவில் கடிதம் அனுப்பிய சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள சாம்ராஜ்நகர் மாவட்டம், லோக்கனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் உத்தமராஜா (வயது 40). இவர் கடந்த 3 வருடத்திற்கு முன்னதாக திருப்பூரில் தங்கியிருந்து பணியாற்றி இருக்கிறார். அப்போது, 28 வயதுடைய இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்படவே, இருவரும் நாளடைவில் காதல் வயப்பட்டுள்ளனர்.
அதனைத்தொடர்ந்து, சொந்த ஊர் சென்ற உத்தமராஜா, இளம்பெண்ணுடன் செல்போன் மற்றும் முகநூல் வழியே பேசி காதலை வளர்த்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம் பெண்ணின் குடும்பத்தாருக்கு தெரியவந்து, அவர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் உத்தமராஜாவால் காதலியுடன் பேச இயலாத நிலை ஏற்பட்டுவிட, எனக்கும் - காதலிக்கும் திருமணம் செய்து வைக்காத பட்சத்தில், மார்ச் 2 ஆம் தேதியான அவரின் பிறந்தநாளில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு தீக்குளித்து தற்கொலை செய்வேன் என தமிழ்நாடு ஆளுநர், முதல்வர், திருப்பூர் ஆட்சியர், காவல் ஆணையர் உள்ளிட்டோருக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார்.