தோழியின் மீது காதல்: கணவனையும் 2 குழந்தைகளையும் தவிக்கவிட்டு தலைமறைவான பெண்..!
தோழியின் மீது காதல்: கணவனையும் 2 குழந்தைகளையும் தவிக்கவிட்டு தலைமறைவான இணம்பெண்..!
திண்டுக்கல் அருகில் உள்ள பழைய வக்கம்பட்டியை சேர்ந்த 24 வயது பெண்ணுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் மில்லில் வேலைபார்த்து வந்தார். அப்போது அதேமில்லில் வேலை பார்த்த பித்தளைப்பட்டியை சேர்ந்த திருமணமாகாத பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருக்கமாகினர்.
பின்னர் அவர்கள் 2 பேரும் திடீரென தலைமறைவாகினர். இதனால் மாயமான பெண்ணின் கணவர் மில்லில் விசாரித்தபோது திருமணமாகாத பெண்ணுடன் நெருக்கமாக பழகி வந்ததை தெரிவித்தனர். இதனையடுத்து திண்டுக்கல் தாலுகா போலீசில் அவரது கணவர் புகார் அளித்தார். எஸ். பி உத்தரவின் பேரில் ஏ. எஸ். பி அருண்கபிலன் ஆலோசனையின் பேரில் இன்ஸ்பெக்டர் பாலாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி மற்றும் போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வந்தனர். 2 பேரும் பெங்களூரில் தங்கியிருப்பது தெரியவந்தது.
அங்கு தனியாக அறைஎடுத்து வசித்து வந்ததும், அங்கேயே வேலை பார்த்து வாழ முடிவு செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனைதொடர்ந்து போலீசார் அவர்களை மீட்டு திண்டுக்கல்லுக்கு அழைத்து வந்தனர். பின்னர் இருவருக்கும் அறிவுரை கூறி திருமணமான பெண்ணை அவரது கணவருடன் அனுப்பி வைத்தனர்.