மது அருந்த மனைவி பணம் தராததால் விரக்தியில் கணவர் எடுத்த விபரீத முடிவு.!
மது அருந்த மனைவி பணம் தராததால் விரக்தியில் கணவர் எடுத்த விபரீத முடிவு.!
விழுப்புரம் சாலாமேடு பகுதியில் மாணிக்கம் - அனிதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். மாணிக்கம் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் மாணிக்கம் அனிதாவிடம் குடிப்பதற்காக தினந்தோறும் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். இதன் தொடர்ச்சியாக சம்பவத்தன்று மாணிக்கம் அனிதாவிடம் மது அருந்த பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அனிதா அன்று பணம் தர மறுத்துள்ளார்.
இதனால் மனமுடைந்த மாணிக்கம் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அனிதா அக்கம் பக்கத்தினர் உதவியோடு மாணிக்கத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு மாணிக்கத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பின் மாணிக்கத்தின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு விரைந்து வந்த விழுப்புரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.