×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

புறவழிச் சாலை அருகே வாலிபர் எரித்து கொலை; விழுப்புரத்தில் அதிர்ச்சி சம்பவம்...!!

புறவழிச் சாலை அருகே வாலிபர் எரித்து கொலை; விழுப்புரத்தில் அதிர்ச்சி சம்பவம்...!!

Advertisement

விழுப்புரம் புறவழிச்சாலை அருகே வாலிபரின் உடல் எரிந்த நிலையில் கிடந்தது. அதனை கைப்பற்றிய காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் புறவழிச்சாலையில் உள்ள விராட்டி குப்பம் அருகில் நேற்று காலை எரிந்த நிலையில் வாலிபர் ஒருவரின் உடல் கிடப்பதாக அந்த பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

அதன் அடிப்படையில் விழுப்புரம் டிஎஸ்பி பார்த்திபன் தலைமையில், தாலுகா இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.

காவல் துறையினர் எரிந்த நிலையில் கிடந்த உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடல் அருகில் இருந்த தடயங்களை தடயவியல் நிபுணர்கள் சேகரித்தனர்.

மேலும் வாலிபரின் உடல் அருகே இருந்த பைக் மற்றும் ஹெல்மெட்டை காவல் துறையினர் கைப்பற்றினர். காவல் துறையினரின் விசாரணையில் எரிந்த உடலின் அருகே கிடந்த புகைப்படத்துடன் கூடிய ஆதார் அட்டை வைத்து, அந்த வாலிபர் திருநெல்வேலி மாவட்டம் கருவந்தி கிராமம் அம்பேத்கர் விருதியை சேர்ந்த அப்ரகாம் மகன் பெஞ்சமின் (28) என்பதை கண்டுபிடித்தனர்.

அவர் சென்னையில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததுள்ளார். கடந்த ஜனவரி மாதம் சொந்த ஊருக்கு சென்றவர் மீண்டும் வேலைக்கு செல்லும் வழியில் விழுப்புரத்தில் மர்மமான முறையில் எரிந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். 

முன் விரோதம் காரணமாக அவர் மர்ம நபர்களால் எரித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விழுப்புரம் தாலுகா காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil nadu #Villupuram #Bypass Road #A teenager was burnt to death
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story