தனது கழுத்தை தானே அறுத்துக் கொண்ட வாலிபர்: கடை வீதியில் வெறிச் செயல்!,, பதறிய இளைஞர்கள்..!
தனது கழுத்தை தானே அறுத்துக் கொண்ட வாலிபர்: கடை வீதியில் வெறிச் செயல்!,, பதறிய இளைஞர்கள்..!
கடலூர் மாவட்டம், விருதாச்சலம் பகுதியிலுள்ள வீரபாண்டியன் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் மணிகண்டன் (32). இவர் திட்டக்குடி அருகேயுள்ள பெண்ணாடம் கடைவீதி, ஜும்மா மசூதி அமைந்துள்ள பகுதியில் திடீரென தான் வைத்திருந்த பிளேடால் தன்னைத்தானே கழுத்தில் சரமாரியாக அறுத்துக் கொண்டார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் அவரை மடக்கிப் பிடித்தனர். இதனைத் தொடர்ந்து பெண்ணாடம் காவல் நிலையத்தை தொடர்பு கொண்ட அவர்கள், இந்த சம்பவம் கூறித்து தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெண்ணாடம் காவல்துறையினர், இளைஞரை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவருடைய ஊரும், பெயரும் மட்டுமே தெரியவந்தது. மணிகண்டன் எதற்காக தனது கழுதை தானே அறுத்துக் கொண்டார் என்ற கேள்விக்கு சரியான பதில் கூறவில்லை என்றும், அவர் கஞ்சா போதையில் இதனை செய்திருக்கலாம் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.