"ஆத்தாடி இப்படி கிளம்பிட்டாங்களே..." கணவன் மனைவி சண்டையில் கணவனின் கையை கடித்து வைத்த மனைவி... காவல்துறை அதிகாரிகள் விசாரணை!
ஆத்தாடி இப்படி கிளம்பிட்டாங்களே... கணவன் மனைவி சண்டையில் கணவனின் கையை கடித்து வைத்த மனைவி... காவல்துறை அதிகாரிகள் விசாரணை!
திருச்சி அருகே குடும்பத்த தகராறு காரணமாக மனைவி தனது கணவனை அடித்து உதைத்து கடித்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கணவர் கொடுத்த புகாரின் பேரில் மனைவியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் மாருதி நகர் ரயில்வே கேட் பகுதியைச் சேர்ந்தவர் இனிகோ வயது 42. இவருக்கும் டெய்சி ராணி(36) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்ற சில ஆண்டுகளிலேயே கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு நடைபெற்று வந்தது.
இதனைத் தொடர்ந்து பிரிந்து வாழ்ந்து வந்த அவர்களை உறவினர்கள் சமாதானம் பேசி சேர்த்து வைத்தனர். இதனால் கடந்த ஆண்டிலிருந்து இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு சண்டை நடைபெற்று இருக்கிறது. அப்போது கணவன் என்றும் பாராமல் டெய்சி ராணி இனிகோவை கடுமையாக அடித்து உதைத்துள்ளார்.
அப்படியும் கோபம் தீராத அவர் தனது கணவரின் கைகளை கடித்து வைத்திருக்கிறார். இதனால் கணவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனைத் தொடர்ந்து இனிகோ கொடுத்த புகாரின் பேரில் அவரது மனைவியிடம் காவல்துறை விசாரணை செய்து வருகிறது.