கொடூரத்தின் உச்சம்: அந்தரங்க உறுப்பு வெட்டி சிதைத்து பெண் கொலை... காவல்துறை விசாரணையில் வெளியான உண்மை.!
கொடூரத்தின் உச்சம்: அந்தரங்க உறுப்பு வெட்டி சிதைத்து பெண் கொலை... காவல்துறை விசாரணையில் வெளியான உண்மை.!
ஆந்திர மாநிலத்தில் பணத்திற்காக ஏற்பட்ட தகராறின் போது பெண்ணை கொலை செய்து அவரது பிறப்புறுப்பை துண்டித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது இச்சம்பவம் தொடர்பாக கேரளாவைச் சார்ந்த நபர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.
ஆந்திர மாநிலம் விசாகா மாவட்டத்தில் கேரளாவைச் சார்ந்த ஓலிகள் பிரடீஸ்(37) என்ற நபர் ஃபேப்ரிகேட்டராக வேலை செய்து வருகிறார் இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். விடுமுறைக்காக அவர்கள் ஊருக்குச் சென்று இருக்கின்றனர்.
அப்போது இவர் பெண் ஒருவரை பணம் தருவதாக கூறி தனது வீட்டிற்கு அழைத்து வந்து அவருடன் நெருக்கமாக இருந்துள்ளார். பின்னர் இருவருக்குமிடையே பணம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பிராடீஸ் அந்தப் பெண்ணை தனது வீட்டின் மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்திருக்கிறார்.
கொலை செய்தது மட்டுமல்லாமல் அந்தப் பெண்ணின் பிறப்புறுப்பையும் சிதைத்து இருக்கிறார். பின்னர் அவருடைய உடலை எடுத்துச் சென்று ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் வீசி எரிந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக அந்த நபரை கைது செய்துள்ள காவல் துறை அவரிடம் தீவிரமாக விசாரணை செய்து வருகிறது.