×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சென்னையில் போதை ஆசாமி கும்பலால் யூடியூபருக்கு நேர்ந்த சம்பவம்; அதிரவைக்கும் வீடியோ வைரல்.!

சென்னையில் போதை ஆசாமி கும்பலால் யூடியூபருக்கு நேர்ந்த சம்பவம்; அதிரவைக்கும் வீடியோ வைரல்.!

Advertisement


சென்னை உட்பட தமிழகத்தின் பல நகரங்களில் சட்டம்-ஒழுங்கு ரீதியான பிரச்சனை மேலோங்கி இருக்கிறது. இதனால் நடந்த பல கொலைகள் பெரும் விவாதத்தை எதிர்கட்சியிடையே ஏற்படுத்தி இருக்கிறது. யூடியூபில் பிரபலமாக இருக்கும் நபர்கள் தங்களது ஒவ்வொரு பயணத்தின் போதும், அதனை வீடியோ எடுத்து வெளியிட்டு வருகின்றனர். அவ்வாறாக சாலைகளில் வீடியோ எடுத்தபடி பயணிக்கும் சிலர், உள்ளூர் நபர்களால் சந்திக்கும் பிரச்சனையும் வெளிவருகிறது. 

இந்நிலையில், சென்னையில் உள்ள ரிச்சி ஸ்ட்ரீட் பகுதியில் நடந்து சென்றுகொண்டு இருந்த A2D Army எனப்படும் யூடியூப் பக்கத்தை நடத்தி வரும் நந்தகுமாரை, மதுபோதையில் இருந்த கும்பல் மிரட்டி இருக்கிறது. பட்டப்பகலில், மக்கள் கடந்து செல்லும் பாதையில் இந்த சம்பவமானது நடந்துள்ளது. கஞ்சா, மதுபோதையில் தங்களை வீடியோ எடுக்கக்கூறி மிரட்டிய கும்பல், குரல் கொடுத்தால் பசங்க சுற்றிவளைப்பார்கள் எனவும் கூறியது.

இதனையடுத்து, கும்பலின் செயல்பாடுகள் குறித்து அங்கிருந்த காவலருக்கு தகவல் தெரிவித்தபோது, அவர் உள்ளூர் நபர் ஒருவரின் உதவியுடன் போதை கும்பலிடம் பேரம்பேசி செல்போனை வாங்கி கொடுத்து இருக்கிறார். இந்த சம்பவம் குறித்த காணொளி வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், சம்பந்தப்பட்ட நபர்கள் குறித்து விசாரணை நடத்த சரக காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: ரூ.25 இலட்சத்தை ஏமாற்றிவிட்டு ஓட்டம்பிடித்த மகளிர் மன்ற குழுத் தலைவி.. 30 பேர் கண்ணீருடன் புகார்.!

ஆனால், இதேபோல தாங்கள் பாதிக்கப்படும் விடீயோக்களை வெளியிட்டு, அதனையும் ட்ரெண்டாக்கும் யூடியூபர்கள் சுய பாதுகாப்பில் கவனமாக இருக்க வேண்டும் என்பதும் கவனிக்கத்தக்கது.

யூடியூப் வீடியோ:

இதையும் படிங்க: மாடு வாலில் ஜடை பின்னி அட்ராசிட்டி.. டேய் இதெல்லாம் ரொம்ப ஓவர்டா.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest news #tamilnadu #A2D Channel
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story