×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விவசயிகளுக்கு ஆதார் அவசியம்!! நிதியுதவி திட்டத்திற்காக அதிரடி அறிவிப்பு!!

aadhaar must for formers

Advertisement

மத்தியில் ஆட்சி செய்யும் பாரதிய ஜனதா கட்சியானது கடந்த 1 ம் தேதியன்று பட்ஜெட் தாக்கல் செய்தது. அந்த பட்ஜெட்டில் 2 ஹெக்டேருக்கு குறைவான அளவில் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு‌ ஆண்டுக்கு ‌‌6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும் ‌என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதன் மூலமாக சுமார் 12 கோடி விவசாயிகள் பயன் அடைவார்கள் என்றும்., இந்த ரூ.6 ஆயிரம் மூன்று தவணையாக வங்கிகளில் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

விவசாயிகள் இந்த நிதி உதவியை பெற ஆதார் அட்டை அவசியம் என அறிவித்துள்ளது. ஆனால் முதல் தவணை தொகையான இரண்டு ஆயிரம் ரூபாய் பெற ஆதார் அவசியமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது தவணை பெரும்பொழுது ஆதார் எண், பயனாளரின் பெயர், நிலத்தின் அளவு மற்றும் வங்கி கணக்கு எண் ஆகிவை இருக்க வேண்டும் எனவும், நிலம் வேறு நபர்களின் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டு இருப்பின் அவர்கள் இந்த திட்டத்திற்கு தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த திட்டத்தில் தவறுகள் நடக்காமல் இருப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்த திட்டத்தை கண்காணிப்பதற்காக மத்திய அரசின் குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#aadhaar #farmers
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story