மாணவர்களின் மனதில் கோவிலாய் குடிகொண்டுள்ள தமிழக விஞ்ஞானி பிறந்த தினம் இன்று!
abdul kalam birth day
ராமேஸ்வரத்தில் பிறந்து, இந்தியாவின் அணு விஞ்ஞானி, அறிவியல் ஆசிரியர், குடியரசுத் தலைவர் என பன்முகத் தன்மை கொண்டவராக விளங்கிய அணைத்து இளைஞர்களின் மனதில் கடவுளாய் குடியிருக்கும் அப்துல் கலாமின் 88 வது பிறந்த தினம் இன்று.
1931-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந்தேதி ஜைனுலாப்தீன்- ஆஷியம்மா ஆகியோருக்கு மகனாக அப்துல் கலாம் பிறந்தார். திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலும், சென்னை தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.
அப்துல் கலாம் அவர்கள் குடியரசுத்தலைவராக பதவி ஏற்பதற்கு முன் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார்.
ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார் அப்துல் கலாம். இது கலாம் அவர்களுக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது. அந்த சாதனையை பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கலாம் அவர்களை கௌரவித்தது. கலாம் செய்த சாதனைகள் ஏராளமாக உள்ளது. ஆனாலும் கடைசி வரை எளிமையாகவே வாழ்ந்தார் கலாம் அவர்கள்.
2015 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடையே உரையாற்றிக் கொண்டிருக்கும்போது மயங்கி விழுந்தார். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, காலமானார். மாணவர்களை மட்டுமே நாட்டின் ஆக்கம் என நினைத்துவந்த கலாம் அவர்கள் மாணவர்கள் முன்பே சாய்த்து விழுந்தது இன்றளவு மாணவர்கள் மனதில் மறையாமல் உள்ளது.
அவரது இறந்த தினத்தில் இந்தியாவில் உள்ள மூளை முடுக்கெல்லாம் கலாம் அவர்களின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். உலகதையே இந்தியாவை திரும்பி பார்க்கவைத்த மறைந்த தமிழக விஞ்ஞானிக்கு இன்றைய பிறந்த தினத்திற்கு வாழ்த்துக்களை தெரிவிப்போம்.