ஏசியை போட்டுவிட்டு நல்லா தூங்கிக்கொடிருந்த வழக்கறிஞர்.. இரவு 10 மணிக்கு டமாரென வெடித்த ஏசி.. பரபரப்பு சம்பவம்..
வீட்டில் இருந்த ஏசி திடீரென வெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டில் இருந்த ஏசி திடீரென வெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கீழ்பாக்கம் பர்னபி சாலையைச் சேர்ந்தவர் முத்து ராஜா. உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று இரவு தனது வீட்டின் முதல் தளத்தில் உள்ள ஏசி அறையில் ஏசியை போட்டுவிட்டு தூங்கச்சென்றுள்ளார்.
அப்போது இரவு 10 மணியளவில் ஏசி பலத்த சத்தத்துடன் ஏசி வெடித்துச் சிதறி எரியத் தொடங்கியுள்ளது. இதனால் பதறிப்போன குடும்பத்தினர் அலறியடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஒட்டியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து உடனே கீழ்பாக்கம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் ஏசியில் எரிந்துகொண்டிருந்த நெருப்பை அணைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்துவரும்நிலையில், வீட்டில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக ஏசி வெடித்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.