இளம்பெண் இறப்பில் கணவன் மீது குற்றச்சாட்டு.. தர்ணாவில் உறவினர்கள்..!
இளம்பெண் இறப்பில் கணவன் மீது குற்றச்சாட்டு.. தர்ணாவில் உறவினர்கள்..!
தேனி டொம்புச்சேரி பட்டாளம்மன் கோயில் தெருவில் வீரக்குமார் தனது மனைவி சரண்யாவுடன் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டிற்கு முன் திருமணமாகி ஒரு மகன் உள்ள நிலையில் தற்போது சரண்யா 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவதன்று சரண்யா படுக்கையில் இறந்த நிலையில் இருந்ததாக கூறி வீரகுமார் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் பழனிசெட்டிபட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அங்கு விரைந்து வந்த காவல் துறையினர் சரண்யாவின் உடலை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சரண்யா கர்ப்பகாலத்தில் மருத்துவம் பார்த்த வீரபாண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவரது உடல்நலம் பற்றி விசாரணை நடத்தினர்.
இதற்கிடையில் சரண்யாவின் உறவினர்கள் அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், சரண்யாவின் கணவர் வீரக்குமாரை கைது செய்ய கோரியும் கலெக்டர் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பழனிசெட்டிபட்டி காவல் துறையினர் வீரக்குமாரை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.