கஜா புயலால் வீட்டை இழந்த மூதாட்டியின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்த ராகவா லாரன்ஸ்!
actor lawrance opens house built for gaja
வங்கக் கடலில் உருவாகிய கஜா புயல், 2018 நவம்பர் மாதத்தில் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஏற்பட்ட முதலாவது புயலாகும். தமிழகக் கடற்கரையை கடக்கும்போது கடும் புயலாக இருந்ததால் அதிக வேகத்துடன் காற்று வீசியதோடு, கன மழையும் பெய்தது. இதன் காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 63 பேர் உயிரிழந்தனர்.
இந்த பயங்கர புயலால் இயற்கை வளங்கள், தோப்பு மரங்கள், விவசாயப் பயிர்கள், மக்களின் உடைமைகள் ஆகியனவற்றிற்கு பெருத்த சேதம் ஏற்பட்டது. மேலும் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுகை மாவட்டத்தை சேர்ந்த பல குடிசை வீடுகள் காற்றில் பறந்து இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டன.
அண்ட் சமயத்தில் நிவாரண உதவிக்காக சென்ற நடிகர் ராகவா லாரன்ஸ் மக்கள் வீடுகளை இழந்து வாடுவதற்கு கண்டு மிகவும் வேதனைப்பட்டார். அப்போது அவரை சந்தித்த சில முதியவர்கள், எங்களுக்கு தங்குவதற்கு வீடு இல்லாமல் போய்விட்டது. அதற்கு ஒரு வழி செய்து தருமாறு கோரிக்கை விடுத்தனர். மக்களின் இந்த துயரத்தை கண்ட நடிகர் லாரன்ஸ் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு இலவசமாக வீடு கட்டி தருவதாக வாக்குறுதி அளித்தார்.
அவர் கொடுத்த வாக்குறுதியின்படி வீடுகளை கடும் பணியினை கடந்த வருடம் நவம்பர் மாதத்திலே துவங்கிவிட்டார் லாரன்ஸ். அதன்படி வீட்டின் பணிகள் ஒவ்வொன்றாக நிறைவு பெற்று வருகிறது. கடந்த வாரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் அலங்குடியை சேர்ந்த சமூக சேவகர் 515 கணேசன் அவர்களின் வீட்டினை லாரன்ஸ் திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து இன்று வயதான மூதாட்டி ஒருவரின் வீட்டினை திறந்து வைத்துள்ளார் நடிகர் லாரன்ஸ். இவரது வீட்டிற்கு கடந்த நவம்பர் மாதத்தில் தான் பூமி பூஜை போடப்பட்டது. வீட்டில் அந்த மூதாதியுடன் குத்துவிளக்கேற்றிய லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். அதில் தனது இந்த சேவைக்கு உதவியாய் இருந்த மொத்த குழுவினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.