பதைபதைப்பு சி.சி.டி.வி. காட்சிகள்: நடிகர் சிம்புவின் கார் ஏற்படுத்திய விபத்தில் முதியவர் பலி.. ஓட்டுநர் கைது.!
பதைபதைப்பு சி.சி.டி.வி. காட்சிகள்: நடிகர் சிம்புவின் கார் ஏற்படுத்திய விபத்தில் முதியவர் பலி.. கார் ஓட்டுநர் கைது.!
சென்னையில் உள்ள தேனாம்பேட்டை, இளங்கோ சாலையில் பிச்சைக்காரரின் மீது கார் ஏறி இறங்கி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்தவர் படுகாயமடைந்தார்.
அவர் சிகிச்சைக்காக சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட நிலையில், விபத்து குறித்து தகவல் அறிந்த பாண்டிபஜார் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
அப்போது, விபத்தை ஏற்படுத்திய கார் நடிகர் சிம்புவுடையது என்பது உறுதியாகவே, அவரிடம் விசாரணை நடந்துள்ளது. விசாரணையில், சம்பவத்தன்று நடிகர் சிலம்பரசனின் தந்தை டி. இராஜேந்தர் மற்றும் சிம்புவின் கார் ஓட்டுனர் செல்வம் இருவரும் சாலையில் சென்றுள்ளனர்.
அந்த சமயத்தில் தான் விபத்து ஏற்பட்டு முதியவர் பலியாகி இருக்கிறார். இதனையடுத்து, செல்வதை கைது செய்த காவல் துறையினர், வழக்கில் டி.ராஜேந்தருக்கு சம்பந்தம் இல்லை என விசாரணைக்கு பின் அனுப்பி வைத்தனர்.