விவேக் இறந்து நான்கு மாதங்களுக்கு பிறகு அவர் மரணத்தில் திடீர் திருப்பம்!! உண்மையில் என்ன நடந்தது??
தடுப்பூசியால் தான் விவேக் மரணமடைந்ததாக கூறி விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன், தேச
தடுப்பூசியால் தான் விவேக் மரணமடைந்ததாக கூறி விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன், தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். தற்போது இந்த புகாரை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.
தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவரான விவேக் அவர்கள் கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி உயிரிழந்தார்.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அடுத்த சில நாட்களில் விவேக் உயிரிழந்தது பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. ஆனால் தடுப்பூசி காரணமாக அவர் இறக்கவில்லை என மருத்துவர்கள் கூறியிருந்தனர். ஆனாலும் விவேக் மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் எழுந்தது.
தடுப்பூசியால் தான் விவேக் மரணமடைந்ததாக கூறி விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவர், தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். தற்போது நடிகர் விவேக் மரணம் தொடர்பான விவகாரத்தை விசாரணைக்கு ஏற்று, அதுகுறித்து விசாரிக்க உள்ளது தேசிய மனித உரிமைகள் ஆணையம்.
இதன் மூலம் நடிகர் விவேக் எப்படி இறந்தார்? அவரது இறப்பிற்கு முக்கிய காரணம் என்ன? தடுப்பூசிதான் காரணமா என்பது குறித்து பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.