பாமக-வை இதுக்கு மேல யாரும் மோசமா கலாய்க்க முடியாது - நடிகை கஸ்தூரியின் பகீர் ட்வீட்
Actress kasthuri about pmk
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்தியா முழுவதும் கட்சிகளுக்கு இடையே கூட்டணி குறித்த பேச்சுகள் தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகி தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் அதிமுக கூட்டணியில் சேர பாஜகவை தவிர பல கட்சிகளும் யோசனை செய்வதே தற்போதைய கள நிலவரம்.
அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெறுவதாகவும், அதற்கான சீட் விவகாரங்கள் நடந்து வருவதாகவும் பேச்சு அடிபட்டு வருகிறது. ஆனால் இதுவரை எந்த கட்சியுடன் கூட்டணி என்று பாமக பகிரங்கமாக அறிவிக்கவில்லை. இருந்தாலும் அதிமுகவா, திமுகவா என பாமக ஆலோசனையிலேயே இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பாமக-வின் இந்த நிலைப்பாடு பற்றி நடிகை கஸ்தூரி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “PMK 4 சீட்டுக்கு இப்பிடி மாத்தி மாத்தி பேரம் பேசுறதுக்கு பேசாம அதிமுக, திமுக ரெண்டு கட்சியோடயும் தலா 2 சீட்டு கூட்டணி வச்சி புரட்சி பண்ணிரலாம். திராவிட அரசியலுக்கு மாற்று, டாஸ்மாக் கட்சிகளுக்கு எதிர்ப்பு, மாற்றம் முன்னேற்றம் எல்லாம் என்ன ஆச்சு?" என்று கலாயத்துள்ளார்.