×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கதறும் நடிகை வனிதா: 13 வயதில் எனக்கு திருமணம்; இப்பொது 13 வயதில் எனக்கு ஒரு மகள்; என்னால் எங்கே போக முடியும்!!

actress vanitha filed a case in comissioner office

Advertisement

நடிகர் விஜயகுமார் அவரது மூத்த மகள் வனிதாவின் மீது கொடுத்த புகாரின் பேரில் நேற்று முன்தினம் இரவு மதுரவாயல் உதவி கமிஷனர் ஜான்சுந்தர், இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் ஆகியோர் தலைமையில் பெண் போலீஸ் உள்பட போலீசார் அங்கு சென்று வனிதாவை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறினார்கள். 

நடிகை வனிதா தங்கியிருந்த வீடு தனக்கு சொந்தமானது எனவும் சினிமா படப்பிடிப்புக்காக நடிகை வனிதா வாடகைக்கு எடுத்துள்ளார் எனவும், இப்பொது அவர் அந்த வீட்டை காலி செய்ய மறுப்பதாகவும் நடிகர் விஜயகுமார் மதுரவாயல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த வீட்டிற்கு சென்ற போலீசார் வனிதா மற்றும் அவரது நண்பர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். அந்த வீட்டை பூட்டுபோட்டு பூட்டி, சாவியை நடிகர் விஜயகுமாரிடம் போலீசார் ஒப்படைத்துள்ளனர்.

நடிகை வனிதா மற்றும் அவரது நண்பர்கள் மீது கொலை மிரட்டல், பொது சொத்துக்கு பங்கம் விளைவித்தல், அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் நேற்று கமிஷனர் அலுவலகத்திற்கு அழுதபடி வந்த நடிகை வனிதா அவரிடம் புகார் ஒன்றை அளித்தார். 

அதன் பிறகு பேசிய அவர் நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவிற்கு பிறந்த மூத்த மகள் நான். நான் தற்போது வசித்து வரும் வீடு எனது தாயார் மஞ்சுளாவின் பெயரில் தான் உள்ளது. தாய் வீட்டில் தங்குவதற்கு மக்களுக்கு உரிமை இல்லையா?

எனக்கு 13 வயதில் திருமணம் செய்து வைத்து விட்டார்கள். இப்பொழுது எனக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். எனது திருமண வாழ்க்கையில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை. எனவே தான் என் தாயாருடன் நான் இங்கு வந்து தங்கி இருந்தேன். எனது வாழ்க்கையில் நான் பல போராட்டங்களை சந்தித்து வருகிறேன்.

எனது அனைத்து அடையாள அட்டைகளிலும் வங்கி கணக்குகளில் இந்த வீட்டு முகவரியை தான் கொடுத்துள்ளேன். இந்த வீட்டை எனக்கு எழுதிக் கொடுத்து விடுங்கள் என்று நான் கேட்கவில்லை என் தாயார் வாழ்ந்த வீட்டில், எனது தாயின் உயிர் போன இந்த வீட்டில் ஒரு ஓரத்தில் தங்கிக்கொள்ள இடம் தந்தால் போதும் என்றுதான் கேட்கிறேன். 

தற்பொழுது நான் சொந்தமாக 'டாடி' என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறேன். அதனுடைய வேலைகளை இந்த இல்லத்தில் இருந்து தான் நான் கவனித்து வருகிறேன். திடீரென்று என் தந்தை விஜயகுமார் என்னை வீட்டை விட்டு வெளியேறும்படி கூறினால் எனது 13 வயது மகளுடன் நான் எங்கு செல்ல முடியும். இந்த வீட்டைக் கட்டுவதற்கு என்னுடைய உழைப்பு நான் நடித்து சம்பாதித்த பணமும் கொடுத்துள்ளேன். நான் வாடகைக்கு இந்த வீட்டில் தங்கி இருப்பதாக புகார் புகார் கொடுத்துள்ளார்கள். சொந்த வீட்டிற்கு யாராவது வாடகை கொடுத்து தாங்குவார்களா.

அவர் எனக்கு கொடுத்த வந்த தொல்லையால் என்னை தொடர்ந்து அந்த வீட்டில் தங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கடந்த திங்கட்கிழமை அன்று சென்னை சிவில் கோர்ட்டில் வழக்கு வழக்கு ஒன்றை பதிவுசெய்தேன். அதனை தொடர்ந்து தான் எனது தந்தை இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

சொந்த வீட்டில் இருந்து என்னை வெளியேற்றுவதற்கு போலீசுக்கு எப்படி உரிமை வந்தது? ஒரு புகார் கொடுத்தால் அதில் உள்ள உண்மைத்தன்மையை போலீசார் விசாரிக்க வேண்டுமல்லவா? சென்னையில் பல்வேறு பிரச்சினைகளுக்காக பொதுமக்கள் புகார் கொடுக்கிறார்கள். அந்த புகார் மனுக்களுக்கு எல்லாம் உடனடியாக இதுபோல் நடவடிக்கை எடுக்கிறார்களா? ஒரு பெண் என்றுகூட பார்க்காமல், அதுவும் நான் பிரபல நடிகை என்றுகூட பார்க்காமல் என்னை இன்ஸ்பெக்டர் அடித்து உதைத்து காயப்படுத்தி வெளியேற்றினார்.

எனக்கு நடந்த அநியாயத்துக்கு நியாயம் கோரிதான் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்துள்ளேன். போலீஸ் கமிஷனர் எனக்கு நியாயம் வழங்கவேண்டும் என்று புகார் மனு கொடுத்துள்ளேன். இணை போலீஸ் கமிஷனரை சந்திக்கும்படி கூறி இருக்கிறார்கள். அந்த இன்ஸ்பெக்டர் மீது மனித உரிமை ஆணையத்திலும் புகார் கொடுக்க உள்ளேன்.

இவை அனைத்தும் எனது சகோதரர் நடிகர் அருண்விஜய் மற்றும் எனது சகோதரியின் கணவர் இயக்குனர் ஹரியின் தூண்டுதலின் பேரில் தான் நடந்துவருகின்றன" என்று கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#actor vijayakumar #Actress vanitha #vijayakumar and vanitha #vanitha house problem #actor arunvijay #Director hari
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story