அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் தோற்பது நிச்சயம்.! அ.தி.மு.க எம்.எல்.ஏ பரபரப்பு பேச்சு.!
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்டத்தில் எந்தத் தொகுதியில் நின்றாலும் தோற்பது நிச்சயம் என சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. இந்தநிலையில், அரசியல் கட்சியினர் பல்வேறு தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அணைத்து கட்சியினரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன்(அ.தி.மு.க.) பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். மக்கள் குறைதீர்க்கும் முகாம் கூட்டத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன், அமைச்சர் தன்னை கொலை மிரட்டல் விடுத்ததாகவும் இதுகுறித்து ஆடியோ ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும் தேவைப்பட்டால் பெற்றுக்கொள்ளலாம் இதுகுறித்து தலைமை கழகத்திடம் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
இங்குள்ள அமைச்சர், மேலிடத்தில் கட்சிக்கு துரோகம் செய்தார்கள் என்று தவறாக சொல்லி, சாத்தூர் தொகுதிக்கு உட்பட்ட 3 அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள், 2 நகர செயலாளர்கள் ஆகியோரை அமைச்சரின் பரிந்துரையின் பெயரில் மாற்றி இருக்கிறார்கள். மேலும், விருதுநகர் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் அ.தி.மு.க வீழ்த்தப்பட்டதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தான் காரணம்.
எனவே அமைச்சர் விருதுநகர் மாவட்டத்தில் எந்த தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டாலும் தோற்பது நிச்சயம் என பேசியுள்ளார். அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இவ்வாறு பேசியது விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.