ஒரே தொகுதியில் இரு வேறு காட்சிகளில் அண்ணன் - தம்பி போட்டி.. சூடுபறக்கும் தேர்தல் களம்..
வர இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் ஒரே தொகுதியில் அண்ணன் தம்பி இருவரும் வேறு வேறு கட்சி
வர இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் ஒரே தொகுதியில் அண்ணன் தம்பி இருவரும் வேறு வேறு கட்சியில் போட்டியிடுகின்றனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் அனைத்து கட்சிகளும் கூட்டணி உடன்பாடு, வேட்பாளர்கள் அறிவிப்பு என பயங்கர பிசியாக இருக்கும் நிலையில் தற்போது வேட்பு மனு தாக்களும் தொடங்கிவிட்டது. இந்நிலையில் கலைஞர், ஜெயலலிதா ஆகிய இருவரும் இல்லாத முதல் பெரிய சட்டமன்ற தேர்தலை திமுக, அதிமுக காட்சிகள் சந்திக்கின்றன.
இதனால் இந்த முறை எந்த கட்சி வெற்றிபெறும் என்று தெரிந்துகொள்ள மக்கள் அனைவரும் மிகவும் ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் உடன்பிறந்த அண்ணன் - தம்பி இருவரும் வேறு வேறு கட்சியில் போட்டியிடுவது மேலும் சுவாரசியத்தை அதிகரித்துள்ளது.
ஆண்டிப்பட்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏவாக இருந்த தங்கத் தமிழ்ச்செல்வன் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, கடந்த 2019ஆம் ஆண்டு அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் திமுக சார்பில் மகாராஜன் என்பவரும், அதிமுக சார்பில் அவரது தம்பி லோகிராஜன் என்பவரும் களமிறங்கினர்.
இதில் அண்ணன் மகாராஜன் வெற்றிபெற்றார். இந்நிலையில் வரைக்கும் சட்டமன்ற தேர்தலிலும் அதே தொகுதியில் அண்ணன் மகாராஜன் திமுக சார்பிலும், தம்பி லோகிராஜன் அதிமுக சார்பிலும் போட்டியிடுகின்றனர்.