×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மீண்டும் உயர்ந்தது சுங்கச்சாவடி கட்டணம்: நள்ளிரவு முதல் அமல்!.. வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி..!

மீண்டும் உயர்ந்தது சுங்கச்சாவடி கட்டணம்: நள்ளிரவு முதல் அமல்!.. வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி..!

Advertisement

நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் ஆண்டுக்கு ஒருமுறை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. அதன் படி, தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் சில சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில், செப்டம்பர் 1 ஆம் தேதி (இன்று) முதல் மீதமுள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் 20 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. விழுப்புரம் அருகே உள்ள விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில், இதுவரை கார், ஜீப், வேன் ஆகியவற்றுக்கு ரூ.90 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது, ரூ.10 உயர்த்தப்பட்டு ரூ.100 வசூலிக்கப்படுகிறது.

பஸ், லாரி போன்ற கனரக வாகனங்களுக்கு ரூ.310 கட்டணமாக வல்சூலிக்கப்பட்டு வந்தது. இது தற்போது ரூ. 45 உயர்ந்து ரூ.355 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வுக்கு வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

விக்கிரவாண்டி-திண்டிவனம்-உளுந்தூர்பேட்டை மார்க்கம்,  கொடை ரோடு-திண்டுக்கல்-புறவழிச்சாலை-சமயநல்லூர் மார்க்கம், மனவாசி- திருச்சி- கரூர், மேட்டுப்பட்டி-சேலம்-உளுந்தூர்பேட்டை மார்க்கம், மொரட்டாண்டி-புதுச்சேரி-திண்டிவனம், நத்தக்கரை-சேலம்-உளுந்தூர்பேட்டை மார்க்கமாக செல்லும் வகனங்கள் மற்றும்  ஓமலூர்-நாமக்கல், தர்மபுரி-கிருஷ்ணகிரி-தும்பிப்பாடி மார்க்கம், பொன்னம்பலப்பட்டி-திருச்சி-திண்டுக்கல், புதூர்பாண்டியபுரம்-மதுரை-தூத்துக்குடி மார்க்கம், சமயபுரம்-பாடலூர்-திருச்சி, செங்குறிச்சி-உளுந்தூர்பேட்டை-பாடலூர் மார்க்கங்கள் உள்ளிட்ட 20 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#toll fee #Toll Fee Hike #tamilnadu #Toll Booths #national highway
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story