கொரோனா நேரத்தில் மேலும் ஒருவன் வாட்டி வதைக்க வருகிறான்! மக்களே உஷார்!
Agni natchathiram started today
உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர். கொரோனாவால் மக்கள் வதைபட்டு வரும் நேரத்தில், சுட்டெரிக்கும் வெயில் மக்களை வாட்டி வருகிறது. அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில் வரும் அக்னி நட்சத்திரம் பொதுமக்களை வாட்டி வதைக்கும். இதைத்தான் அக்னி நட்சத்திரம் அல்லது கத்திரி வெயில் எனக் கூறுகிறோம்.
இந்நிலையில், இந்த ஆண்டு இன்று காலை 8.57 மணிக்கு அக்னி நட்சத்திரம் தொடங்கி தொடர்ந்து 24 நாட்கள் அதாவது வருகிற 28-ம் தேதி பகல் 1.51 மணியோடு நிறைவடைகிறது. இந்த காலகட்டத்தில் முதல் 7 நாள்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்.
21-ஆவது நாளில் வெயில் உச்சத்தைத் தொடும். அதன்பிறகு படிப்படியாக வெப்பத்தின் தாக்கம் குறையத் தொடங்கும். கொரோனாவை மட்டுமல்லாமல் இந்த அக்னி நட்சத்திர வெயிலையும் பொதுமக்கள் சமாளிக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை காலம் தான் இந்த அக்னி நட்சத்திரம்.