போதைப்பொருள் கிடங்காக மாறிய தமிழ்நாடு - எடப்பாடி பழனிசாமி நூதன முறையில் கடும் கண்டனம்.!
போதைப்பொருள் கிடங்காக மாறிய தமிழ்நாடு - எடப்பாடி பழனிசாமி நூதன முறையில் கடும் கண்டனம்.!
ரூ.2000 கோடி போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில், திமுக பிரமுகர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு டெல்லி சிறப்பு காவல் துறையினரால் தேடப்பட்டு வந்தார். இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஜாபர் சாதிக் என்பவர் இன்று கைது செய்யப்பட்டு இருக்கிறார். தொடர்ந்து போதைப்பொருள் நடமாட்ட விவகாரத்தில் அரசு செயலிழந்துவிட்டதாக அதிமுக சார்பில் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தனது எக்ஸ் பக்கத்தில் திமுக மற்றும் போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான செயல்முறை ஒன்றை கையில் எடுத்துள்ளார். அதன்படி, அவரின் பெயரில் Say no to Drugs and DMK என குறிப்பிட்டு இருக்கிறார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "மாணவர்கள் மற்றும் இளைஞர்களை சீரழிக்கும் போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும்,போதைப்பொருள் மாபியா விவகாரத்தில் திமுகவின் நிர்வாகிகளே ஈடுபடுவதாக செய்திகள் வருகின்ற நிலையில், இந்த விடியா திமுக ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும், வருகின்ற மார்ச் 12ம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அளவில் கழகத்தின் சார்பில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களை இணைத்து மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற இருக்கின்றது.
கழகத்தின் தொடர்ச்சியான போதைப் பொருட்களுக்கு எதிரான போராட்டங்களின் குறியீடாக, என்னுடைய டிவிட்டர் “X” தளத்தின் முகப்பு பக்கத்தில் "Say No To Drugs & DMK" என்ற வாசகத்தை இன்று இணைக்கிறேன். கடைசி துளி போதைப்பொருள் ஒழியும் வரை
அதிமுகவின் போராட்டம் தொடரும்!" என தெரிவித்துள்ளார்.