தமிழகத்தில் உறுதி செய்யப்பட்ட எச்எம்பிவி வைரஸ்; முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அரசுக்கு கோரிக்கை.!
தமிழகத்தில் உறுதி செய்யப்பட்ட எச்எம்பிவி வைரஸ்; முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அரசுக்கு கோரிக்கை.!
சீனாவில் இருந்து இந்தியா, மலேஷியா உட்பட பல நாடுகளில் பரவி வரும் எச்எம்பிவி வைரஸ், இந்தியாவில் 8 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, சேலம் பகுதிகளை சேர்ந்தவர்களுக்கும், பெங்களூரில் 3 மாத, 8 மாத கைக்குழந்தைக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் காய்ச்சல், சளி, இரும்பல், மூச்சுத்திணறல் ஆகிய அறிகுறி இருந்தால் மருத்துவமனையில் அனுமதியாகி சோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது, குறிப்பாக குழந்தைகள், இளம் வயதினருக்கு அதிக பாதிப்புகளை உண்டாக்கும் எச்எம்பிவி வைரஸ் பரவலை தடுக்க முகக்கவசம், சானிடைசர், தனிமனித இடைவெளி, இருமலின்போது கவனமாக இருத்தல் போன்றவை அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் கோரிக்கை
இந்நிலையில், தமிழ்நாடு அரசு உடனடியாக சிறப்பு தடுப்பு நடவடிக்கைகை முடுக்கிவிட வேண்டும் என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடபிராக அவர் பதிவு செய்துள்ள சமூக வலைதளப்பதிவில், "சீனாவில் அதிகம் பரவி வரும் வைரஸ்களில் ஒன்றான HMPV (Human Metapneumo Virus) தற்போது இந்தியாவிலும் பரவ தொடங்கியிருப்பதும், அண்டை மாநிலமான கர்நாடகாவிலும், நம் தமிழ்நாட்டில் சென்னை மற்றும் சேலத்தில் இருவருக்கு தொற்று உறுதியாகி இருக்கும் செய்திகள் மக்களை பதட்டமடைய செய்திருக்கிறது.
இதையும் படிங்க: #Breaking: சட்டப்பேரவையில் கடும் அமளி.. அதிமுகவினர் வெளியேற்றம் - சபாநாயகர் உத்தரவு.!
வழிகாட்டுதலை வெளியிடுங்க
பருவ காலங்களில் சுவாச நோய்களை ஏற்படுத்துகிற ஏற்கெனவே அறியப்பட்ட HMP வைரஸ் என நிபுணர்கள் தெரிவித்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, பொதுமக்களுக்கு முறையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை வெளியிட வேண்டுமென வலியுறுத்துகிறேன். ஏற்கனவே தமிழகம் முழுவதும் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிற சூழலில், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம்களை ஏற்படுத்துவதோடு மக்களை பதட்டமடைய செய்யாமல் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும்.
பொங்கல் பண்டிகை நெருங்கி வருகிற இச்சூழலில் மக்கள் அதிகம் கூடுகிற வாய்ப்பு இருப்பதனால் தமிழக அரசு முன்கூட்டியே உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென, கழக பொதுச்செயலாளர்; சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் வழிகாட்டுதலோடு சட்டமன்றத்தில் இதுகுறித்து வலியுறுத்துவோம்!" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: #Breaking: "வந்த வேகத்தில் இருந்து புறப்பட்டார்" - சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய ஆளுநர்; அதிமுக, காங்கிரஸ், தவாக கோஷம்.!