மொத்தமாக வந்தாலும், ஒத்தையாக வந்தாலும் நாங்கள் சமாளிக்க தயார்.. அடித்து கூறிய முன்னாள் அமைச்சர்.!
மொத்தமாக வந்தாலும், ஒத்தையாக வந்தாலும் நாங்கள் சமாளிக்க தயார்.. அடித்து கூறிய முன்னாள் அமைச்சர்.!
அதிமுக தலைமையிலேனே கூட்டணி என்பது முடிவாகும். நாங்கள் ஒதுக்கீடு செய்யும் தொகுதிகள் கூட்டணிக்கட்சியினருக்கு வழங்கப்படும் என ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், "டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வம், சசிகலா இணைவதற்கு அவர்கள் முயற்சி செய்யலாம். ஆடு நனைகிறது என ஓநாய் அழக்கூடாது. எங்களின் கட்சியில் எந்த பிரச்சனையும் இல்லை.
எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையில் கட்சி நன்றாக பயணிக்கிறது. எதிரிகளின் கருத்தை யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இது தேவையில்லாத எல்லி நகையாடக்கூடிய கருத்து. அதிமுகவில் சண்டை இல்லை. சிலர் கட்சிக்கு வெளியே சென்று பயணித்தார்கள். அவர்களை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
எந்த சூழ்நிலையிலும் எங்களின் தலைமையிலேயே கூட்டணி என்பது இருக்கும். கூட்டணியில் நாங்கள் ஒதுக்கீடு செய்யும் இடங்களே கூட்டணிக்கு வழங்கப்படும். 2024ல் எங்களது தலைமையிலேயே கூட்டணி என்பது இருக்கும். அக்கூட்டணியில் டிடிவி, ஓ.பி.எஸ்., சசிகலா என மொத்தமாக வந்தாலும், தனியாக வந்தாலும் கூட்டணியில் இணைக்க வாய்ப்பே இல்லை.
திமுக ஆதிச்சியின் மீது மக்களுக்கு அதிருப்தி இருக்கிறது. பொங்கலுக்கு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரூ.5 ஆயிரம் கொடுப்போம் என கூறினார்கள். இன்று என்ன நடந்தது?. மக்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்" என்று பேசினார்.