#BigBreaking: முன்னாள் அமைச்சர் ஜெய்குமாருக்கு ஜாமின் கிடைத்தது - தொண்டர்கள் கொண்டாட்டம்.!
#BigBreaking: முன்னாள் அமைச்சர் ஜெய்குமாருக்கு ஜாமின் கிடைத்தது - தொண்டர்கள் கொண்டாட்டம்.!
கடந்த பிப். 19 ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது, கள்ளஓட்டு போட வந்த திமுக பிரமுகர் நரேஷ் குமாரை தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. திமுக பிரமுகரை அரை நிர்வாணப்படுத்தி ஊர்வலம் சென்ற சம்பவம் நடந்தது.
இந்த விஷயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட திமுக நிர்வாகி காவல்நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் ஜெயக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் தரப்பில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில், முதலில் ஜாமின் வழங்கப்படவில்லை.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் வழங்கக்கூறி மனுதாக்கல் செய்ய, மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், திருச்சியில் தங்கியிருந்து, கண்டோமென்ட் காவல் நிலையத்தில் வாரத்தின் 3 நாட்கள் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையும் வழங்கப்பட்டுள்ளது.