"நாங்கதான், எங்களோடு தான்" - ஆணித்தரமாக அடித்துக்கூறி, பற்றவைத்த முன்னாள் அமைச்சர்..!
நாங்கதான், எங்களோடு தான் - ஆணித்தரமாக அடித்துக்கூறி, பற்றவைத்த முன்னாள் அமைச்சர்..!
எந்த தேர்தலாக இருந்தாலும் சரி அ.தி.மு.க தலைமையில் தான் கூட்டணி என முன்னாள் அமைச்சர் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள அச்சம்பத்து - புதுக்குளம் பகுதியில், தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட சமுதாய கூட்டத்தினை அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு எம்.எல்.ஏ மக்களின் பயன்பாட்டிற்காக திறந்துவிதார். அப்போது அவர் அளித்த பேட்டியில், "2024 நாடாளுமன்ற தேர்தலில் மாநில கட்சியோ, தேசிய கட்சியோ எதுவாக இருப்பினும் அவர்கள் அதிமுகவின் தலைமையில் தான் கூட்டணியில் இருப்பார்கள்.
அ.தி.மு.க-வின் தலைமையிலான கூட்டணியை ஏற்றுக்கொள்ளும் கட்சியுடன் தான் நாங்கள் கைகோர்ப்போம். அதில் எவ்வித மாற்றமும் இல்லை. அ.தி.மு.க எக்கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற விஷயத்தை தேர்தல் நேரத்தில் தலைமை முடிவு செய்யும்" என்று பேசினார். பாஜகவை பொறுத்தவரையில் எங்களின் தலைமையில் கூட்டணி என அவர்கள் கூற, அதிமுக அவர்களின் விருப்பத்தை கூற அரசியல் மட்டத்தில் ஒரே பரபரப்பாக இருக்கிறது.