#Breaking: சைடு கேப்பில் சபாநாயகருக்கு ஆப்பு வைத்த அதிமுக; "நம்பிக்கையில்லா தீர்மானம்" - விவாதத்துக்கு ஏற்பு.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
#Breaking: சைடு கேப்பில் சபாநாயகருக்கு ஆப்பு வைத்த அதிமுக; நம்பிக்கையில்லா தீர்மானம் - விவாதத்துக்கு ஏற்பு.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

2025 - 2026 ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல், இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்றது. சட்டப்பேரவை அறிவிப்புகளை மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில், மொத்தமாக 932 இடங்களில், தமிழ்நாடு முழுவதும் சிறப்பு காணொளி நேரடி ஒளிபரப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அடுத்த 25 ஆண்டுகளை கருத்தில் கொண்டு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நம்பிக்கையில்லா தீர்மானம்
இந்நிலையில், சட்டப்பேரவை சபாநாயகர் மீது அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. எதிர்க்கட்சி அவை உறுப்பினர்களை நீண்ட நேரம் பேச அனுமதிப்பது இல்லை. எதிர்க்கட்சியினர் பேசினால், அதனை நேரடி ஒளிபரப்பு செய்யாமல் இருட்டடிப்பு செய்யப்படுகிறது உட்பட பல விஷயங்களை முன்வைத்து அதிமுக சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டு வந்துள்ளது.
இதையும் படிங்க: #Breaking: மொழியை திணிக்க நினைத்தால் பிரச்சனை தான் வரும் - முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி.!
திங்கட்கிழமை விவாதம்
இந்த தீர்மானம் மீதான விவாதம் வரும் திங்கட்கிழமை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தரப்பில் அறிவிக்கப்ட்டுள்ளது. விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் தீர்மானம் மீது அவையோர்கள் தங்களின் வாதங்களை முன்வைப்பார்கள். அலுவல் ஆய்வுக்கூட்டத்துக்கு பின்னர் சபாநாயகர் அப்பாவு இதுதொடர்பான தகவலை உறுதி செய்தார்.
3ல் 1 பங்கு எம்.எல்.ஏ ஆதரவு இருக்கும் பட்சத்தில், தீர்மானம் விவாதம் எடுக்கப்படும். விவாதத்துக்கு பின்னர் நடைபெறும் வாக்கெடுப்பில், தோல்வி அடைந்தால் தீர்மானம் முடித்து வைக்கப்படும். அதே நேரத்தில் வாக்கெடுப்பு வெற்றி அடைந்தாள், சபாநாயகர் மாற்றப்படும் வாய்ப்பும் உண்டாகும். ஆனால், அதிமுகவிடம் தற்போது 66 சட்டப்பேரவை உறுப்பினர்களே இருக்கிறார்கள் என்பதால், அதற்கான வாய்ப்புகள் இல்லை.
இதையும் படிங்க: திமுக அமைச்சருடன் அதிமுக நிர்வாகிகள் நெருக்கமா? திருச்சி மாவட்ட நிர்வாகிகளை கடிந்த இபிஎஸ்.!