அதிமுகவில் அடுத்த விக்கெட்?.. கட்சி தாவுகிறாரா சூலூர் எம்.எல்.ஏ?.. முதல்வரை புகழ்ந்து பேசியதால் அரசியல் மட்டத்தில் பரபரப்பு..!
அதிமுகவில் அடுத்த விக்கெட்?.. கட்சி தாவுகிறாரா சூலூர் எம்.எல்.ஏ?.. முதல்வரை புகழ்ந்து பேசியதால் அரசியல் மட்டத்தில் பரபரப்பு..!
முதல்வர் மு.க ஸ்டாலின் மருத்துவத்துறையில் தனிக்கவனம் செலுத்துகிறார். எங்களின் சின்னம் வேறாக இருக்கலாம். எண்ணம் மக்களுக்கான சேவையே என திமுகவை சேர்த்து அதிமுக எம்.எல்.ஏ பாராட்டி பேசியதால் அரசியல் மட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர், பள்ளபாளையம் பகுதியில் சுகாதாரத்துறை சார்பில் வருமுன் காப்போம் என்ற முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கலந்துகொண்ட அதிமுக எம்.எல்.ஏ வி.பி கந்தசாமி, "மறைத்த முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் காலத்தில் மருத்துவத்துறைக்கு தனிக்கவனம் செலுத்தப்பட்டது.
அதனைப்போல், தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் மருத்துவத்துறைக்கு தனிக்கவனம் செலுத்தி வருகிறார். மக்களை காப்பாற்றும் எண்ணத்துடன் சீரிய சிந்தனையோடு தமிழ்நாடு அரசு பணியாற்றுகிறது. மக்களின் வீட்டிற்கு நேரில் வந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதே திமுக அரசின் நோக்கம்.
எந்த திட்டத்தை இந்த (திமுகவை கூறுகிறார்) அரசு கொண்டு வந்தாலும், அதற்கு எம்.எல்.ஏ என்ற முறையில் உறுதுணையாக நான் இருப்பேன். ஏனெனில் நானும் மக்கள் பிரதிநிதியை. அவர்களும் மக்கள் பிரதிநிதி. எங்களின் சின்னம் வேறுவேறாக இருக்கலாம். எண்ணம் ஒன்றுதான். எங்களது எண்ணம் தொகுதி வளர்ச்சிக்கும், மக்களுக்கும் இருக்கும்" என்று பேசினார்.
அரசு சார்பிலான பொதுக்கூட்டம் என்றாலும் அதிமுக எம்.எல்.ஏ முதல்வரையும், அவரின் திட்டங்களையும் பாராட்டி பேசியுள்ளது கோவை அதிமுக தொண்டர்களிடையே லேசான கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர் கட்சி தாவ முயற்சித்து மறைமுக செய்தி கூறியுள்ளாரா? என்ற ஐயமும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது என தெரியவருகிறது.