ரூ.11 இலட்சம் பணமோசடி வழக்கு.. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் அதிரடி கைது..!
ரூ.11 இலட்சம் பணமோசடி வழக்கு.. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் அதிரடி கைது..!
பணமோசடி வழக்கில் முன்னாள் அமைச்சரின் உதவியாளர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த பெண்மணி முத்துலட்சுமி. இவரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் ரவி மற்றும் கார் ஓட்டுநர் விஜய் ஆகியோர் ரூ.11 இலட்சம் பணத்தை வாங்கி மோசடி செய்துள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாக பெண்மணி காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி நடந்துள்ளது என்பதை உறுதி செய்துள்ளனர்.
இதனையடுத்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் ரவி மற்றும் கார் ஓட்டுநர் விஜய் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.