எய்ட்ஸ் பாதித்த பெண்ணை ஏமாற்றி திருமணம்.. காவல் நிலையத்தில் மணமகன் புகார்!
எய்ட்ஸ் பாதித்த பெண்ணை ஏமாற்றி திருமணம்.. காவல் நிலையத்தில் மணமகன் புகார்!
தன்னுடைய மகனுக்கு எய்ட்ஸ் பாதித்த பெண்ணை திருமணம் செய்து வைத்து ஏமாற்றி விட்டதாக மணமகனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வடசென்னை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் அடுத்த சில வாரங்களில் மணப்பெண் கர்ப்பமாகியுள்ளார். இதனையடுத்து அந்தப் பெண்ணுக்கு பரிசோதனை செய்ததில் எய்ட்ஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் கணவர் மற்றும் அவருடைய பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரில் திருமணத்திற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே அந்த பெண்ணுக்கு எய்ட்ஸ் இருந்ததாகவும், ஆனால் அதனை பெண் வீட்டார் மறைத்து திருமணம் செய்து விட்டார்கள் என்றும் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
ஆனால், கணவருக்கு எடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையில் எய்ட்ஸ் இல்லை என்று வந்துள்ளது. இதனால் இந்த புகார் குறித்த உண்மை தன்மையை ஆய்வு செய்ய வேண்டிய நிலை இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அந்தப் பெண்ணுக்கு எய்ட்ஸ் இருக்கிறதா என்பதை மீண்டும் பரிசோதனை செய்து உறுதி செய்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்று போலீசார் கூறியுள்ளனர்.