கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நடிகர் அஜித் நிதியுதவி! அதுவும் எவ்வளவு தெரியுமா?
Ajith donate money to corono relief fund
சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது 190க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்த கொடூர கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அசுர வேகத்தில் பரவி 4421 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 114 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தமிழகத்திலும் 621 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஊரடங்கு உத்தரவால் ஏழை , எளிய தொழிலாளிகள் வாழ்வாதாரத்தை இழந்து, ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் சினிமா தொழிலாளர்கள் பலரும் வேலையின்றி தவித்து வருகின்றனர். மறுபுறம் மத்திய, மாநில அரசுகள் கொரோனாவை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் அவர்களுக்கு உதவும் வகையில் பல பிரபலங்களும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் பிரதமரின் நிவாரண நிதிக்கு 50 லட்சமும், முதல்வரின் நிவாரண நிதிக்கு 50 லட்சமும், சினிமா தொழிலாளர்களின் FEFSI அமைப்பிற்கு 25 லட்சம் நன்கொடையாக கொடுத்து உதவியுள்ளார்.