நடு இரவு..! தலைகீழாக நின்று பூஜை..! கொரோனாவை தடுக்க தங்கள் பங்கிற்கு பூஜை செய்த அகோரிகள்..! திருச்சி அருகே நடந்த சம்பவம்.!
Akorikal pooja for corono
சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது பல நாடுகளிலும் அதிதீவிரமாக பரவி வருகிறது. இத்தகைய கொடூர கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியநிலையில் 6000க்கும் மேற்பட்டோர் கொரோனோவால் பாதிக்கபட்டுள்ளனர். 190க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ள உலக மக்களின் நன்மைக்காக, திருச்சி அரியமங்கலத்தில் அகோரிகள் தலைகீழாக நின்று பூஜை செய்துள்ளனர்.
திருச்சியை சேர்ந்த அகோரி மணிகண்டன், காசியில் பயிற்சி பெற்ற பிறகு அரியமங்கலத்தில் ஜெய் அகோர காளி சிலையை பிரதிஷ்டை செய்து நாள்தோறும் பூஜைகள் மேற்கொண்டு வருகிறார்.இந்நிலையில் கொரோனோவால் மரண பீதியில் இருக்கும் மக்கள் நல்வாழ்வு பெற வேண்டும் என்பதற்காக நேற்று அதிகாலை வர மிளகாய் யாகம் மேற்கொண்டுள்ளார். இந்த யாகத்தில் சமூக விலகல் பின்பற்றப்பட்டுள்ளது.
மேலும் அதில் அகோரிகள் உடல் முழுவதும் திருநீறு பூசி, தலைகீழாக நின்று மந்திரங்கள் கூறியுள்ளனர். மேலும் அகோரி மணிகண்டன் தனது கைகளில் உருத்திராட்ச மணியை உருட்டியபடி நவதானியங்கள், பழங்கள் வர மிளகாய் ஆகியவற்றை யாகத்தில் இட்டு பூஜை செய்துள்ளார். மேலும் பல அகோரிகள் யாகத்தின் போது சங்கு ஒலி எழுப்பியும், ஹர ஹர மகாதேவ் எனவும் முழக்கமிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.