தமிழர்களின் வீரவிளையாட்டான அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தேதி மாற்றம்...
தமிழர்களின் வீரவிளையாட்டான அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தேதி மாற்றம்...
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை ஒட்டி வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதில் மிகவும் புகழ் வாய்ந்தது மதுரை அலங்காநல்லூர்,அவனியாபுரம், பாலமேடு ஆகிய பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் தான். அதிலும் உலக புகழ்வாய்ந்தது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தான்.
அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டை பார்ப்பதற்கு தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் அலங்காநல்லூர் நோக்கி வருடம் வருடம் படையெடுத்து வருவார்கள்.
அதன்படி இந்த வருடம் ஜனவரி 16 ஆம் தேதி நடைபெறவிருந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 17 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.