நெஞ்சு வலியால் துடித்த விவசாயி.. ஓடோடிச்சென்ற 108 குழுவினர்.. நெகிழ்ச்சி செயலால் குவியும் பாராட்டுக்கள்..!
நெஞ்சு வலியால் துடித்த விவசாயி.. ஓடோடிச்சென்ற 108 குழுவினர்.. நெகிழ்ச்சி செயலால் குவியும் பாராட்டுக்கள்..!
விவசாயிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் சேற்றில் நடந்து வந்து மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் முதலுதவி செய்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி பகுதியைச் சார்ந்தவர் ராயப்பன் ஜெயராஜ் (வயது 47). இவர் தனது வயலில் குறுவை சாகுபடிக்காக ஆரம்பகட்ட பணிகளை மேற்கொண்டிருந்தார். அப்போது தண்ணீர் பாய்ச்ச வயலுக்கு சென்ற நிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு வயலிலேயே மயங்கி விழுந்துள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்த நிலையில், உடனடியாக விரைந்த அவசர ஊர்தி மருத்துவ உதவியாளர் பானுப்பிரியா மற்றும் ஓட்டுனர் சேர்ந்து சேறு படிந்த நிலத்தில் இறங்கி, ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று அங்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர்.
அங்கிருந்து விவசாயியை மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இந்த நிகழ்வுகளை அங்கிருந்த பொதுமக்கள் தங்களின் மொபைலில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாக மருத்துவ ஊர்தி குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.