உக்ரைனில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு - ரஷியா படையெடுப்பை உறுதிசெய்த அமெரிக்கா.!
உக்ரைனில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு - ரஷியா படையெடுப்பை உறுதிசெய்த அமெரிக்கா.!
சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பின்னர் தனி நாடாக உருவெடுத்த உக்ரைனை, ரஷியா மீண்டும் தன்னுடன் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது. தற்போது அதனை தனது இராணுவ வலிமையை வைத்து கைப்பற்றவும் ரஷியா முயற்சித்து வருகிறது. மேலும், உக்ரைன் - ரஷியா எல்லையில் 1 இலட்சத்திற்கும் அதிகமான இராணுவ வீரர்களை குவித்து, பெலாரஸ் நாட்டில் போர்பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறது.
இதனால் எந்த நேரத்திலும் உக்ரைனின் மீது ரஷியா படையெடுத்து செல்லலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டும், உக்ரைனின் எல்லையை கடந்து ஐரோப்பிய பகுதிகளை ரஷியா கைப்பற்றாமல் இருப்பதற்கும், உக்ரைன் - ஐரோப்பிய நாடுகள் எல்லையில் நேட்டோ மற்றும் அமெரிக்க படைகள் குவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், "உக்ரைன் நாட்டில் இருக்கும் அமெரிக்கர்கள் அடுத்த 48 மணிநேரத்திற்குள் அங்கிருந்து வெளியேற வேண்டும். ரஷியா உக்ரைனின் மீது எப்போது வேண்டும் என்றாலும் படையெடுக்கலாம்.
சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் முடிவடைவதற்குள் இந்த படையெடுப்புக்கு அதிகாரப்பூர்வ உத்தரவு வழங்கப்படலாம். நாங்கள் தயாராக இருக்கிறோம். அவர்கள் படையெடுப்பை தேர்வு செய்தால், தக்க பதிலடியும் வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.