அம்மா னு வேண்டாம், அப்பா னு கூப்பிடுங்க.. குழந்தையை பெற்றெடுத்த திருநங்கை ஆவேசம்.!
அம்மா னு வேண்டாம், அப்பா னு கூப்பிடுங்க.. குழந்தையை பெற்றெடுத்த திருநங்கை ஆவேசம்.!
திருநங்கையாக மாறி குழந்தையை பெற்றெடுத்த நபர், மருத்துவ ஊழியர்கள் தன்னை அம்மா என அழைத்ததை விமர்சனம் செய்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சார்ந்தவர் பென்னட் காஸ்பர் வில்லியம்ஸ். இவரது கணவர் மாலிக். பென்னட் காஸ்பர் பெண்ணாக பிறந்த நிலையில், அறுவை சிகிச்சை செய்து திருநங்கையாக மாறினார். கடந்த அக். 2020 ஆம் வருடத்தில் கர்ப்பமாக இருந்த பென்னட் காஸ்பர், அறுவை சிகிச்சை மூலமாக ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். ஆண் குழந்தைக்கு ஹட்சன் என்ற பெயரையும் வைத்துள்ளார்.
தற்போது 37 வயதாகும் பென்னட் கடந்த 7 வருடத்திற்கு முன்னதாக அறுவை சிகிச்சை செய்து திருநங்கையாக மாறி இருக்கிறார். அவரது மார்பகத்தை மற்ற 5 ஆயிரம் டாலர் செலவில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட நிலையில், தனது பெண் இனப்பெருக்க மண்டலத்தை மட்டும் அப்படியே வைத்துக்கொள்ள விரும்பி இருக்கிறார். பின்னர். கடந்த 2017 ஆம் வருடம் மாலிக் என்ற நபரை சந்தித்து திருமணம் செய்து இருக்கிறார்.
பென்னட் கர்ப்பமாக இருந்த நேரங்களில் சுகாதார துறையினர் அவரை அம்மா என அழைத்த நிலையில், அதற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், தாய்மைக்கும் - பெண்ணுக்கும் இடையிலான தொடர்பை உடைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்த பென்னட்டின் உரையில், "அமெரிக்காவில் கருத்தரிப்பு மையம் தாய்மை என்ற கருத்தை மையமாக கொண்டது. பாலினத்துடன் பின்னிப்பிணைந்து.
கர்ப்பமாக இருந்த களங்களில் பெண்மை என்பதை நான் உணரவில்லை. மருத்துவமனைகளை தனியாக எதிர்கொண்டது நான் செய்த துணிச்சலான காரியம். தாய்மை என்பதை அடிப்படையிலேயே பெண்மை என்பதை வரையறுப்பதை நிறுத்த வேண்டும். அனைத்து பெண்களும் தாயாகலாம். அனைத்து தாய்களும் தங்களின் குழந்தையை சுமக்கிறார்கள் அல்லது குழந்தையை சுமக்கும் அனைவரும் தாய்மார்கள் என்பது தவறான சமத்துவம் ஆகும். எனது குழந்தையை உருவாக்கிய அப்பா என்று அழைப்பதில் நான் பெருமைப்படுகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
அவரவரின் சமத்துவ கூற்றுகள் அவரவருக்கு..