×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அமமுக-விற்கு பொதுச்சின்னத்தை பரிசாக கொடுத்த தேர்தல் ஆணையம்! கெத்து காட்டும் டிடிவி!

AMMK election symbol

Advertisement


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. வரும் ஏப்ரல் 18ஆம் தேதி, தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அதேநாளில் காலியாக 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அணைத்து கட்சியினரும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இந்தநிலையில் அமமுக-விற்கு  குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என டிடிவி தினகரன் சார்பில் கோரப்பட்டது.  அமமுக ஒரு கட்சியாக இதுவரை பதிவாகவில்லை என்பதால் அமமுக-விற்கு பொதுச் சின்னம் ஒதுக்குவது என்பது இயலாத காரியம் என தேர்தல் ஆணையம் கூறியது.  

இதனையடுத்து உச்சநீதிமன்றம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு பொதுச் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நிலையில் தோ்தல் ஆணையம் அமமுக-விற்கு பொதுச் சின்னம் வழங்கியுள்ளது. டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசுப்பெட்டி சின்னத்தை ஒதுக்கீடு செய்தது தேர்தல் ஆணையம். இதனையடுத்து அமமுக-வினர் மகிழ்ச்சியில் உள்ளனர் 
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#TTV #ammk
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story