நூலிழையில் வெற்றியை பறிகொடுத்த பாமக.! முக்கிய காரணமாக இருந்த அமமுக.!
கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு ஒரு இடத்தில
கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத பாமக, இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகளில் போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற முக்கிய கூட்டணி கட்சியான பாமக 5 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக - பா.ம.க இடையே நேரிடையாக 18 தொகுதிகளில் நடைபெற்ற போட்டியில் 5 தொகுதிகளில் பா.ம.க. வெற்றி பெற்றுள்ளது. எஞ்சியுள்ள 13 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது.
மயிலம், சேலம் மேற்கு, தருமபுரி, பென்னாகரம், மேட்டூர் ஆகிய 5 தொகுதிகளில் பாமக வெற்றி பெற்றது. பாமகவில் அனைத்து வேட்பாளர்களும் கணிசமான வாக்குகளை பெற்றிருந்தனர். பல இடங்களில் நூலிழையில் பாமக வெற்றியை தவறவிட்டுள்ளது. அதற்கும் அமமுக காரணமாக அமைந்துள்ளது. ஏனென்றால் அதிமுக -வை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காகவே அமமுக தேர்தலை சந்தித்தது.
ஒருவேளை அமமுக போட்டியிடாமலோ அல்லது அதிமுகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்து இருந்தாலோ, அமமுக-விற்கு விழுந்த ஓட்டுக்கள் அனைத்தும் அதிமுகவிற்கே கிடைத்திருக்கும். இந்தநிலையில், மயிலாடுதுறை தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் எஸ். ராஜ்குமார், பாமக வேட்பாளர் ஆ.பழனிசாமியை 2,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் இந்த தொகுதியில் அமமுக வேட்பாளர் 7282 வாக்குகளை பெற்று பாமக தோவிக்கு காரணமாக அமைந்தார்.
அதேபோல், நெய்வேலி தொகுதியில் திமுக வேட்பாளர் ராஜேந்திரன், பாமக வேட்பாளர் ஜெகனை 977 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியில் அமமுக வேட்பாளர் பக்தரட்சகன் 2,230 வாக்குகளை பெற்று பாமக தோவிக்கு காரணமாக அமைந்தார்.
அதேபோல், விருத்தாச்சலம் தொகுதியில் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எம்.ஆர்.ராதாகிருஷ்ணன், பாமக வேட்பாளர் கார்த்திகேயனை 862 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்தத் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் 25,908 வாக்குகளை பெற்று பாமக தோவிக்கு காரணமாக அமைந்தார்.